
பிறந்த பொழுதில் அன்புடன்
அரவணைத்து
தன் மார்பையே
மெத்தையாக்கி தாலாட்டி
உறங்க வைத்த அன்னையாய்...
நடை பழகிய பொழுதில்
முடியும் என்ற
தன்னம்பிக்கையூட்டி
நடை பழக்கியவராய் ...
விளையாடும் பொழுதில்
சிறுகுழந்தையாய் உடன்
விளையாடிய
சக தோழராய்...
பள்ளி சென்று
கற்கும் வயதில் கண்டிப்புடன்
கற்றுத்தந்த
ஆசானாய்...
இளமைப் பருவத்தில்
துடிப்புடன் தன்னம்பிக்கையூட்டி
வாழ்க்கைக்கு
வழிகாட்டிய வழிகாட்டியாய்...
வாலிபப் பருவத்தில்
அன்புடன் வாழ்க்கையின்
சுகதுக்கங்களை போதித்த
சான்றோனாய்...
வாழ்க்கைப் பருவத்தில்
பொறுமை காத்து
அனுபவப் பாடத்தை
கற்றுத்தரும் அனுபவசாலியாய்...
இறுதியாய்
பல தியாகங்கள் செய்தும்
வரங்கள் அருளியும்
என்னை மனிதனாக்கிய
தெய்வமாய் என் தந்தை...
No comments:
Post a Comment