Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, July 20, 2009

சிறுமொட்டுகளின் பாரம்


அன்னையின் அரவணைப்புத்
தேவைப்படும் பருவத்தினில்...
ச‌க‌தோழ‌ர்க‌ளுட‌ன் ஓடி
விளையாடும் வ‌ய‌தினில்...
பெற்றோர்க‌ளின் க‌ன‌வுக‌ள்
திணிக்க‌ப்ப‌ட்ட‌ மூட்டையை
த‌ன் முதுகினில் சும‌ந்த‌வாறு
ந‌டைப‌ழ‌கும்‌ சிறுகுழ‌ந்தை
ப‌ள்ளியை நோக்கி...
ந‌ட‌ப்ப‌து என்ன‌வென்று
புரியாம‌ல்...

கல்லூரி நினைவுகள்


தோழர்களின் பிரிவால்
மறையத்துடிக்கும்
மறக்க முடியாத‌
இனிய நினைவுகளுடன்
பிரிகின்றன உடல்கள்
மட்டும் ஆனால்
பிரிவதில்லை உள்ளங்கள்
சகதோழர்களை விட்டு...

வரதட்சணை


வரதட்சணை
திருமணம் அன்றோ
ஆயிரம் காலத்துப் பயிர்...
ஆனால் இன்றோ
ஆயிரம் பார்க்கும் பயிர்...
பெண்களின் எதிர்கால‌
நல்வாழ்வுக்கென‌
திருமணத்தின் போது
கேட்டுப் பெற்ப்படும்
நிச்சயம் இல்லாத லைஃப்
இன்ஸ்யூரன்ஸ் பாலிசி...

Sunday, May 31, 2009

அப்பா


பிறந்த பொழுதில் அன்புடன்
அரவணைத்து
தன் மார்பையே
மெத்தையாக்கி தாலாட்டி
உறங்க வைத்த அன்னையாய்...

நடை பழகிய பொழுதில்
முடியும் என்ற
தன்னம்பிக்கையூட்டி
நடை பழக்கியவராய் ...

விளையாடும் பொழுதில்
சிறுகுழந்தையாய் உடன்
விளையாடிய
சக தோழராய்...

பள்ளி சென்று
கற்கும் வயதில் கண்டிப்புடன்
கற்றுத்தந்த‌
ஆசானாய்...

இளமைப் பருவத்தில்
துடிப்புடன் தன்னம்பிக்கையூட்டி
வாழ்க்கைக்கு
வழிகாட்டிய வழிகாட்டியாய்...

வாலிபப் பருவத்தில்
அன்புட‌ன் வாழ்க்கையின்
சுக‍‍‍‍‍துக்க‌ங்களை போதித்த‌
சான்றோனாய்...

வாழ்க்கைப் பருவத்தில்
பொறுமை காத்து
அனுபவப் பாடத்தை
கற்றுத்தரும் அனுபவசாலியாய்...

இறுதியாய்
பல தியாகங்கள் செய்தும்
வரங்கள் அருளியும்
என்னை ம‌னித‌னாக்கிய‌
தெய்வ‌மாய் என் த‌ந்தை...

Saturday, May 23, 2009

அம்மா


சுமையை சுகமாய்
ஏற்றுக்கொண்டு
பத்து மாத கால
தவத்திற்கு பின்
என்னை ஈன்றெடுத்த
அன்னையை அம்மா
என்றழைக்க விரும்பினேன்
ஆனால் ஏனோ முடியவில்லை
அதனால் தானோ அழுகின்றேன்
அவள் என்னை ஈன்ற பொழுது...